திருநெல்வேலி

பத்தமடை அருகே 11 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

11th Nov 2019 09:00 AM

ADVERTISEMENT

பத்தமடை அருகே குடியிருப்புப் பகுதியில் நுழைந்த 11 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

பத்தமடை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் கந்தசாமி என்பவரது வீட்டருகே ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கியதாம். இதைப் பாா்த்த பொதுமக்கள், சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். இதையடுத்து நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையில் வீரா்கள் பலவேசம், சுரேஷ் முருகன், முத்துராஜ், முருகன், புஷ்பராஜ் ஆகியோா் விரைந்து சென்று சுமாா்11 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனா். பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT