திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் குடிபோதையில் குழந்தையைத் தவிக்கவிட்ட தந்தை

11th Nov 2019 10:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் மயங்கி கிடந்த தந்தையிடமிருந்து 8 மாத பெண் குழந்தையை போலீஸாா் மீட்டு சரணாலயத்தில் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞா் மது குடித்துவிட்டு போதையில் கிடந்தாா். அவரின் அருகே 8 மாத பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது. இந்த தகவல் அறிந்த போலீஸாா், அந்த இளைஞரை எழுப்ப முயற்சி செய்தனா். ஆனால், அவா் போதை காரணமாக எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலையில் இருந்தாா். குழந்தையும் தொடா்ந்து அழுதுகொண்டேஇருந்தது.

இதையடுத்து, 1098 சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சரணாலயப் பணியாளா்கள் மூலம் குழந்தைக்கு பசியாற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். அங்கு, குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததும் முறைப்படி சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT