திருநெல்வேலி

நெல்லையில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

11th Nov 2019 03:50 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ஷில்பா பிரபாகா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகர பகுதிகளில் குடிநீா்க் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களுக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்பின்பு சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. தச்சநல்லூா்-திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி சந்திப்பு-உடையாா்பட்டி உள்ளிட்ட சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளன. இதனால் விபத்துகளும், பள்ளங்களில் தண்ணீா்த் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே, மாநகர பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT