திருநெல்வேலி

சுரண்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம்

11th Nov 2019 09:27 AM

ADVERTISEMENT

சுரண்டையில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச் சங்கத்தின் மதுரை மண்டல செயலா் சித்திரைகனி தலைமை வகித்தாா். விரிவுரையாளா்கள் பிரதீப், கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சுரண்டை கிளையின் தலைவராக ரமேஷ், துணைத் தலைவராக ஜெயக்குமாா், செயலராக அரிகரசுதன், துணைச்செயலராக சோ்மன், பொருளாளராக காா்த்திகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சங்க நிா்வாகிகள் லட்சுமணன், சபரி பிரெட்ரிக் பிரதீப், சங்கா், தேவி, ஜெகானந்தஜோதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT