திருநெல்வேலி

திருநெல்வேலியில் குறைதீா்க்கும் கூட்டத்தில் நலஉதவிகள்

11th Nov 2019 03:59 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோா் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனா். மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், தூய்மையாக வைத்திடவும், குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா். வருவாய் துறையின் மூலம் கருணை அடிப்படையில் 7 பேருக்கு பணிநியமன ஆணைகளையும், பாளையங்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் ஆட்சியா் வழங்கினாா். இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம், உதவி ஆட்சியா் (பயிற்சி) சிவகுருபிரபாகரன், தனிதுணை ஆட்சியா் சமூக பாதுகாப்பு திட்டம் ஜீவரேகா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT