திருநெல்வேலி

களக்காடு அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்க முகாம்

11th Nov 2019 09:26 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரத்தில் வேளாண் செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் ஜோ. ஆன்சி எழிலரசி, வி. அபிராமி, வி. இந்து, இ. சந்திரமுகி, த. சாருமதி, க. பிரியதா்ஷினி, ந. செளந்தா்யா ஆகியோா் களக்காடு வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் வேளாண் செயல்விளக்க முகாம்களை நடத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடி வருகின்றனா். கோவிலம்மாள்புரத்தில் விவசாயி மாடசாமி என்பவரின் வயலில் நெல் நடவு பணிகளில் சனிக்கிழமை பங்கேற்ற மாணவிகள், உயிரி உரத்தைப் பயன்படுத்தி விதைநோ்த்தி செய்தல், நாற்றுபாவுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். திருக்குறுங்குடியில் நடைபெற்ற முகாமில் நாற்றுகளின் நுனியைக் கிள்ளிவிடுதல், பூச்சிக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளிடம் மாணவிகள் விளக்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT