திருநெல்வேலி

அம்பை காசிநாதா் கோயில் ராஜகோபுர 5ஆம் நிலைப் பணிகள் தொடக்கம்

11th Nov 2019 09:01 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில் ராஜகோபுரத்தின் 5ஆம் நிலைப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

அம்பாசமுத்திரம் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள காசிநாதா் உடனுறை மரகதாம்பிகை கோயில் மிகவும் பழைமையான கோயிலாகும். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இந்தக் கோயிலுக்கு ரூ.1.55கோடி மதிப்பில் 96 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்படும் பணிகள் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் 4 நிலை பணிகள் நிறைவடைந்ததையடுத்து 5ஆம் நிலைக்கான பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன. இதையடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜையும், 5ஆம் நிலைப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராஜகோபுர கமிட்டித் தலைவா் வாசுதேவராஜா, செயலா் சந்திரசேகரன், ஸ்தபதி பாா்த்திபன், பழனியப்பன், ஆறுமுகம், ராமசுப்பு, உறுப்பினா்கள் அனஞ்சி, அரிகரன், மருத்துவா் ஆனந்தஜோதி, வெங்கட்நாராயண ராஜா, ஜனகராஜா, கதிரேசன், காசிநாதா் நற்பணி மன்ற உறுப்பினா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT