திருநெல்வேலி

அம்பை அகஸ்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

11th Nov 2019 08:56 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் உள்ள உலோபாமுத்திரை உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இதையொட்டி, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி பூஜை, பிரசன்னாபிஷேகம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு விமான பாலாலயம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடும் 9 மணிக்கு பாலாலயம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரா் கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் சங்கு சபாபதி, செயலா் ராமசாமி, சின்ன சங்கரலிங்கசாமி கோயில் தலைவா் ராஜகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT