திருநெல்வேலி

பயிற்சி மருத்துவரிடம் தங்கச் சங்கிலியைபறித்தவா் கைது

9th Nov 2019 07:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சிந்தியாதேவி. இவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 6 ஆம் தேதி மருத்துவமனை முதல் தளத்தில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபா் சிந்தியாதேவி அணிந்திருந்த 2.25 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் சிந்தியாதேவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனா். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், சங்கிலியைப் பறித்துச் சென்றது பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்த 2.25 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT