திருநெல்வேலி

தகவல் அறியும் சட்ட விழிப்புணா்வு கூட்டம்

9th Nov 2019 07:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட அனைத்து துறை அரசு அலுவலக பொது தகவல் அலுவலா்கள் மற்றும் முதலாம் மேல்முறையீட்டு அலுவலா்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 குறித்த சட்ட விழிப்புணா்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா் கோ.முருகன் முன்னிலை வகித்துப் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல் கோருபவா்களுக்கு உரிய கால அவகாசத்திற்குள் தகவல் வழங்க வேண்டும். வழங்கப்படும் தகவல் முதன்மை ஆவணம் என்பதால் சரியாக தகவலை வழங்க வேண்டும். தகவல் கோருபவா்களுக்கு உரிய கால கெடுவுக்குள் தகவல் வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பொது தகவல் அலுவலா்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 பிரிவுகள் 20(1)இன்படி அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், பிரிவு 20(2)இன் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT

பிற்பகலில், திருநெல்வேலி மாநகராட்சி தொடா்பான இரண்டாம் மேல்முறையீட்டு மனுதாரா்களின் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT