திருநெல்வேலி

சிவகிரியில் பைக் மோதி விவசாயி பலி

9th Nov 2019 07:26 AM

ADVERTISEMENT

சிவகிரியில் சைக்கிள் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சிவகிரி, சந்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் தங்கம் (66). விவசாயியான இவா், வியாழக்கிழமை சிவகிரி தொட்டிச்சிமலையாறு பகுதியில் உள்ள மயானக்கறையில் நடைபெற்ற உறவினரின் இறுதி நல்லடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, தென்கால் கண்மாய் அருகே சென்றபோது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் காயமடைந்து, சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையநல்லூா் காவல் ஆய்வாளா் (பொ) கோவிந்தன் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT