திருநெல்வேலி

குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

9th Nov 2019 07:25 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் இள.அரசு, மணிவண்ணன், ரமேஷ், கே.டி.சி.முருகேசன், அந்தோணிசாமி, தமிழ் என்ற ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT