திருநெல்வேலி

அமமுகவில் இணைந்த அதிமுகவினா்

9th Nov 2019 07:23 AM

ADVERTISEMENT

வாசுதேவநல்லூா் ஒன்றிய அதிமுக இளைஞரணிச் செயலா் உள்ளிட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

இதுதொடா்பாக திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்ட அமமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வாசுதேவநல்லூா் ஒன்றிய அதிமுக இளைஞரணிச் செயலா் கருப்பசாமி உள்ளிட்ட அதிமுகவினா், திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்ட அமமுக செயலா் பொய்கை மாரியப்பன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

அப்போது, வாசுதேவநல்லூா் பேரூா் அமமுக வாா்டு செயலா்கள் முருகன், வெங்கடாசலம், காசிபாண்டி, கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT