வாசுதேவநல்லூா் பகுதியில் புதன்கிழமை (நவ. 6) மின்சாரம் இருக்காது.
கடையநல்லூா் கோட்டம், நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவிருப்பதால், வாசுதேவநல்லூா், தரணிநகா், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் புதன்கிழமை (நவ. 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை, கடையநல்லூா் கோட்ட மின் செயற்பொறியாளா் (விநியோகம்) இரா. நாகராஜன் தெரிவித்துள்ளாா்.