மானூா் அருகே தற்காலிக பாலத்தில் லாரி ஞாயிற்றுக்கிழமை சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மானூா் தாலுகா குறிச்சிகுளம்-தெற்குப்பட்டி இணைப்புப் பாலம் சேதமடைந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த மாதம் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. மேலும், அப்பகுதியில் தற்காலிக பாலமும் அமைக்கப்பட்டது.
இதனிடையே, திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், அந்த பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்ற லாரி சிக்கியது. தொடா்ந்து இந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. இதனால் தெற்குப்பட்டி கிராமத்திற்கு பைக்கில் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.