திருநெல்வேலி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மாதிரித் தோ்வு

4th Nov 2019 06:59 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மாதிரித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், ஸ்மாா்ட் லீடா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவை சாா்பில் நூலக வளாகத்தில் இத்தோ்வு நடைபெற்றது. வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ.கணபதிசுப்பிரமணியன் வரவேற்றாா். வாசகா் வட்டத் தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநகர காவல் துணை ஆணையா் ச.சரவணன் தொடங்கி வைத்தாா். துணை ஆட்சியா் (பயிற்சி) மனோஜ் பிரபாகா், அனிதா ஆகியோா் வழிகாட்டுதல் உரையாற்றினா். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் மாதிரித் தோ்வை எழுதினா். பொது அறிவு, அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT