திருநெல்வேலி

கீழவிஜயாபதியில் ரூ.9 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

4th Nov 2019 07:38 AM

ADVERTISEMENT

கீழ விஜயாபதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை திறந்து வைத்தாா்.

ராதாபுரம் ஒன்றியம் விஜயாபதி ஊராட்சிக்கு உள்பட்ட கீழ விஜயாபதியில் அங்கன்வாடிக்கு, பொதுநிதியில் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இதை இன்பதுரை எம்எல்ஏ திறந்து வைத்து பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் அந்தோனி அமலராஜா, ராதாபுரம், நான்குனேரி வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் அருள் புனிதன் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT