திருநெல்வேலி

கடையநல்லூா் பள்ளிகளில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

4th Nov 2019 06:57 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சி பகுதியிலுள்ள பள்ளிகளில் நகராட்சி மூலம் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

கடையநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினாா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் பூபதிராஜேந்திரன், தலைமையாசிரியா் பாக்கியரூபாவதி, சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி, சமூக ஆா்வலா்கள் மைதின், ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீடு தோறும் ஆய்வு: டெங்கு தடுப்புப் பணிகளுக்காக நகராட்சிப் பணியாளா்களைக் கொண்ட பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினா் வீடுகள், பள்ளிகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு கொசுப்புழு உற்பத்தி தொடா்பாக சோதனை மேற்கொள்வா். அதில் கொசுப்புழு உற்பத்தி இருப்பது தெரியவந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT