ஆலங்குளம் அருகே சாலையோரமுள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் அருகே குத்தபாஞ்சான் ஊராட்சியிலுள்ள காளாத்திமடம் கிராமத்தில் 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் விவசாயம், பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். காளாத்திமடம் - பூலாங்குளம் சாலையோரமாக கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்த பொது கிணறு உள்ளது.
இக்கிணறு பராமரிபின்றி, தடுப்புச் சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள், மாணவா்கள்
நலன் கருதி, குடியிருப்புப் பகுதியில் இருக்கும் இக்கிணற்றை சுற்றிலும் தடுப்புச் சுவா் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.