திருநெல்வேலி

அம்பையில் தேசிய உணவு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

4th Nov 2019 07:38 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற விவசாய அனுபவத் திட்டத்திற்காக அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தங்கி பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து தேசிய உணவு தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம், சோலைபுரம் பகுதி மக்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து கண்காட்சி மூலம் எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT