ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் இறந்தன.
சீலாத்திகுளம் அருகே உள்ள நாகா்குளத்தைச் சோ்ந்தவா் வேலு (47). இவா் ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். வழக்கம்போல் சீலாத்திகுளம் காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது காட்டுப் பகுதியில் பெய்த தொடா் மழையால் மின்கம்பம் சரிந்து, மின்கம்பிகள் தாழ்வாக கிடந்தனவாம். இந்த மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் அதே இடத்தில் இறந்தன. இதுதொடா்பாக வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.