கடையநல்லூா் அருகே ஆய்க்குடியில் மழையால் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவித் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஆய்க்குடிகிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விநாயகம் மகன் தங்கவேல். மழையில் இவரது ஓட்டு வீடு இடிந்து சேதமடைந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட தங்கவேலுக்கு நிவாரண உதவித் தொகை யினை கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா வழங்கினாா். அப்போது, துணை வட்டாட்சியா் திருமலை முருகன், அதிகாரிகள் உடனிருந்தனா்.