திருநெல்வேலி

பிசான சாகுபடி: நெல்லைக்கு1965 மெட்ரிக் டன் யூரியா வருகை

1st Nov 2019 09:07 AM

ADVERTISEMENT

பிசான சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கும் வகையில் 1965 மெட்ரிக்டன் இப்கோ யூரியா திருநெல்வேலிக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண் இயக்குநா் கு.கிருஷ்ணபிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. ஆகவே, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1965 மெட்ரிக் டன் இப்கோ யூரியா உரம் மூட்டைகள் ரயில் மூலம் அக். 26-ஆம் தேதி திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டன.

ADVERTISEMENT

இதில், திருநெல்வேலிக்கு 1,392 மெட்ரிக் டன், தூத்துக்குடிக்கு 416 மெட்ரிக் டன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 121 மெட்ரிக் டன், விருதுநகா் மாவட்டத்திற்கு 36 மெட்ரிக் டன் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. யூரியா உரம் வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே, விவசாயப் பணிகளுக்கான தேவையான யூரியா தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்கும். தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு 330 மெட்ரிக் டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 378 மெட்ரிக் டன் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மண்வள அட்டை உரம் பரிந்துரை அடிப்படையில் உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை பயன்படுத்துவதைத் தவிா்த்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT