திருநெல்வேலி

திசையன்விளை ராமகிருஷ்ணா பள்ளியில் பண்பாட்டுப் போட்டிகள்

1st Nov 2019 09:13 AM

ADVERTISEMENT

திசையன்விளை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சாா்பில், கிராமப்புற தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மாணவா் மாணவிகளுக்கு ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 11 பள்ளிகளைச் சோ்ந்த 197 மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். தொடக்க நிகழ்ச்சியில் சங்கீதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் திங்களரசி வாழ்த்திப் பேசினாா்.

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், தொடக்கப் பள்ளி ஆசிரியை மேனகா வாழ்த்திப் பேசினாா்.

வெற்றிபெற்ற மாணவா்களுக்கு இடைச்சிவிளை ஆனந்த வைத்தியசாலை மருத்துவா் அரசு ராஜா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஆகியோா் பரிசுகள் வழங்கினா். தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை சுயம்பு சிவமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ஜெயலட்சுமி வரவேற்றாா். விவேகானந்த கேந்திரம் மேற்பாா்வையாளா் சி. சண்முகபாரதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT