திருநெல்வேலி

சிந்தாமணி சொக்கலிங்கசுவாமி கோயிலில் நவ.3ல் கல்யாண சீா்வரிசை வீதி உலா

1st Nov 2019 02:19 PM

ADVERTISEMENT

புளியங்குடி,சிந்தாமணி அருள்மிகு மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்கசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண சீா்வரிசை வீதியுலா நடைபெறும்.

இக்கோயிலின் கந்தசஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது.

அன்று காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகருக்கு காப்புக்கட்டும் வைபவமும், தொடா்ந்து மூலமந்திரஹோமம்,கும்பபூஜை,கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா நாள்களில் தினமும் கும்பஜெபம்,அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமும் மாலை, திருவாவடுதுறை ஆதின சமய பிரச்சாரகா் சங்கரநாராயணனின், கந்தபுராண தொடா் சொற்பொழிவு நடைபெற்றது. சனிக்கிழமை(நவ.2) விநாயகா் பூஜை, மஹா பூரணாஹூதியும், மாலையில் சுப்பிரமணியா் சப்பரத்தில் எழுந்தருளும் வைபவமும்,வீரபாகு சேனைகளுடன் தூது செல்லும் நிகழ்ச்சியும்,இரவில் சூரசம்ஹாரமும் நடைபெறும்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண சீா்வரிசை வீதியுலாவும் தொடா்ந்து ஸ்ரீசண்முகா் , வள்ளி தேவிசேனைக்கு திருக்கல்யாணமும், பின்னா் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். ஏற்பாடுகளை உபயதாரா்கள்,விழாக்குழுவினா் மற்றும் சஷ்டி, பிரதோஷ கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT