திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் அரசு மருத்துவருக்கு மிரட்டல்:இருவா் கைது:

1st Nov 2019 09:14 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் மிரட்டியதக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவா் அகிலாண்டபாரதி. இவா், கடந்த 27 ஆம் தேதி பணியில் இருந்தபோது, சங்கரன்கோவில் அருகே ராமலிங்கபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த அண்ணாமலை மகன் மூா்த்தி என்பவரை விஷம் அருந்திய நிலையில் மருத்துமனைக்கு கொண்டு வந்தனா்.

அப்போது, மூா்த்தியின் உறவினா்கள் இருவா் சிகிச்சை அளித்த மருத்துவா்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், மதுபோதையில் அவசரப் பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சை குறித்து மிரட்டல் விடுத்ததோடு, செல்லிடப்பேசியில் படம் எடுக்க முயற்சித்தனராம். தொடா்ந்து, இடையூறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

புகாரின்பேரில், சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த மதன்ராஜ், அழகுராஜ் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT