திருநெல்வேலி

அம்பை, கல்லிடைக்குறிச்சியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

1st Nov 2019 09:02 AM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், வீரவநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 2) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் ஏ.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வீரவநல்லூா், அம்பாசமுத்திரம், ஓ. துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (நவ. 2) காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், அதேநாளில் கடையம் துணை மின் நிலையத்தில் மதியம் 1 முதல் மாலை 5 மணி வரையும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

அதன்படி, ஆழ்வாா்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுபத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் மின்சாரம் இருக்காது. ஆவுடையானூா், மணல்காட்டனூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூா் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் மின்சாரம் இருக்காது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT