கீழாம்பூர் ஊராட்சியில் வாக்குச் சாவடியை மாற்ற எதிர்ப்பு

கீழாம்பூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு  வாக்குச் சாவடியை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து வட்டாட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கீழாம்பூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு  வாக்குச் சாவடியை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து வட்டாட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கடையம் ஊராட்சி ஒன்றியம்,  கீழாம்பூர் ஊராட்சிக்குள்பட்ட மஞ்சப்புளி காலனியில் 502 வாக்காளர்கள் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடி  மஞ்சப்புளி காலனியில் அமைக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், இந்த வாக்குச் சாவடியை  கீழாம்பூர் ஊராட்சியின் மேற்குப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு மாற்ற அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம். இதையடுத்து வாக்குச் சாவடியை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியத்  தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் வேலாயுதம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.கசமுத்து, சட்டநாதன்,  சமுத்திரவேல் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com