திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் காயமடைந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கி ராஜா (24). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர், வியாழக்கிழமை இரவு பெருமாள்புரத்தில் மருந்துகளை கொடுத்துவிட்டு புதிய பேருந்து நிலைத்துக்கு தன்னுடைய இருசக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் இசக்கிராஜா இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இசக்கிராஜா வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.