காமராஜரின் 117ஆவது பிறந்த நாளையொட்டி தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 9, 10 ஆம் வகுப்பு பிரிவில், லிட்டில் பிளவர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு மாணவர் இசக்கியப்பன் இரண்டாம் இடத்தையும், 11,12 ஆம் வகுப்பு பிரிவு போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவர் கபில் 3 ஆம் இடத்தையும் பெற்றனர். இவர்கள் இருவரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை பள்ளித் தாளாளர் ஏ.மரியசூசை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.