திசையன்விளை அருகே பெண்ணை தாக்கியதாக தந்தை மகன் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திசையன்விளை அருகே கோட்டைகருங்குளத்தைச் சேர்ந்த சற்குணம் மனைவி தர்மத்தாய் (60). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் குமார் (40) என்பவருக்கும், மத்திய அரசின் இலவச வீடு கட்டுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் தர்மத்தாயை, குமார் மற்றும் அவரது உறவினர் அலெக்சாண்டர் உள்ளிட்ட 4 பேர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தர்மத்தாய் அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, தந்தை மகன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.