சங்கரன்கோவில் ஏவிகே மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 8ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.
ஏவிகே கல்விக் குழுமங்களின் தலைவர் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் தலைமை வகிக்கிறார். தாளாளர் எம்.ஆர்.திருந்தையன் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.கலியமூர்த்தி பங்கேற்று பேசுகிறார். பள்ளி முதன்மை முதல்வர் எம்.ஜெகந்நாதன், ஏவிகே சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சுப்பிரமணியன்ஆகியோர் வரவேற்கின்றனர். பள்ளி முதல்வர் ஏ.ராமச்சந்திரன் நன்றி கூறுகிறார்.