திருநெல்வேலி

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு : கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்

29th Jun 2019 10:23 AM

ADVERTISEMENT

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம், வடக்கன்குளம், காவல்கிணறு, ஆனைகுளம் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தொடர்பான சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது. கூடங்குளம், செட்டிகுளம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குடிநீர் பிரச்னை தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடக்கன்குளம், காவல்கிணறு ஊராட்சிகளில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுசிலா பீட்டர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.அலி ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்கக் கூடாது எனவும், மேலும், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள ஆனைகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT