திருநெல்வேலி

வேய்ந்தான்குளம், குறிச்சி பகுதியில் குடிமராமத்து பணிகள்: ஆட்சியர் ஆய்வு

31st Jul 2019 09:46 AM

ADVERTISEMENT

வேய்ந்தான்குளம் மற்றும் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடித்திட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அவர் கூறியது: நீர்நிலைகளை பாதுகாத்திட விவசாயிகளை கொண்டே குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் பணிகளை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு நீர் நிலைகள், குளங்கள், ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல்,  நீர் உள்வரும் மற்றும் வெளிய செல்லும் பாதைகளை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்க  வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரவருணி வடிநில கோட்ட பகுதியில் 84 பணிகளும், தென்காசி பகுதியில் சிற்றாறு வடிநில கோட்ட பகுதியில்  90 பணிகளும், கோதையாறு வடிநில கோட்ட பகுதியில்  1 பணியும், வைப்பாறு வடிநில கோட்ட பகுதியில் 10 பணிகளும் என மொத்தம் 185 பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். 
ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT