திருநெல்வேலி

வீராணம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு

31st Jul 2019 07:31 AM

ADVERTISEMENT

வீராணம் அருகே தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயை உடைத்த பொக்லைன் ஓட்டுநர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் விடுபட்ட வழியோர 72 கிராம மக்களுக்காக சேர்ந்தமரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் 2003 முதல் தாமிரவருணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர்க் குழாய் நந்தன்தட்டையில் தொடங்கி, ஆலங்குளம், கீழவீராணம், ஊத்துமலை வழியாக சேர்ந்தமரம் வரை செல்கிறது.
தற்போது கீழ வீராணம் முதல் உக்கிரன்கோட்டை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது வீராணம் அருகே பொக்லைன் ஓட்டுநரால் குடிநீர்த் திட்ட குழாய் உடைக்கப்பட்டதாம்.
இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உடைப்பு சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஏற்கெனவே கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாயை உடைத்த  அதே இடத்தில் பொக்லைன் ஓட்டுநரால் மீண்டும் குழாய் உடைக்கப்பட்டதாம். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் க.கோபால் அளித்த புகாரின் பேரில் வீரகேரளம்புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT