திருநெல்வேலி

பாபநாசம், பொட்டல்புதூரில் ஆக. 2 இல் மின்தடை

31st Jul 2019 07:29 AM

ADVERTISEMENT

பாபநாசம், பொட்டல்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் ஏ. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விக்கிரமசிங்கபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
அதன்படி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலாறு, ரவணசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூர், ஆம்பூர், பாப்பான்குளம், அடையக்கருங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 2)  மின்சாரம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT