திருநெல்வேலி

"நெல்லை ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்'

31st Jul 2019 07:28 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியை தலைமையிடமாக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என வள்ளியூர் நாடார் மஹாஜன சங்க ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வள்ளியூர் நாடார் மஹாஜன சங்க ஆண்டு விழா சங்கத் தலைவர் ஐ.ஜோவின் பார்சுனேட் தலைமையில் நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநிலப் பொருளாளர் புழல் தர்மராஜ், தெட்சணமாற நாடார் சங்கச் செயலர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு நாடார் மஹாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், வின்சி, தமிழ்நாடு நாடார் பேரவை நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் செந்தில், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கத் தலைவர் ரெஜிஸ்சிங், வள்ளியூர் நாடார் மஹாஜன சங்கச் செயலர் சங்கரமூர்த்தி, பொருளாளர் வில்லியம் தனசிங், துணைத் தலைவர் சாம்ராஜ், சட்ட ஆலோசகர் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை உள்பட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், "திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்ட தனி ரயில்வே கோட்டம் அமைக்கவேண்டும்; வள்ளியூர் பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்; சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டவேண்டும்' என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் சங்கரமூர்த்தி வரவேற்றார். ஏ.எஸ்.ஒய்.வாசகன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT