திருநெல்வேலி

செங்கோட்டை கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

31st Jul 2019 07:29 AM

ADVERTISEMENT

செங்கோட்டை ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோயிலில், ஆருத்ரா திருவாசக கமிட்டி சார்பில்,  15ஆவது மாதாந்திர திருவாசக முற்றோதுதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கமிட்டித் தலைவர் தங்கையா முதலியார் தலைமை வகித்தார்.  செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வீரபுத்திரன், செண்பகம், வள்ளிநாயகம், மாரியப்பன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ராமநாத் வரவேற்றார்.  நிகழ்ச்சியில்,  ஸ்ரீநித்யகல்யாணி அம்மன்  மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக,  தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து  பிரேமா தலைமையில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT