திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு  ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

31st Jul 2019 07:28 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
தேசியக் கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யக் கோரியும், ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு.முத்தானந்தம் தேவதாஸை பாராட்டியும் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, நகரத் தலைவர் அ.செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஞா.பால்ராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கி.தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை, பொதுச் செயலர் ச.மயில், முன்னாள் பொதுச் செயலர் செ.போத்திலிங்கம், மாநிலச் செயலர் சோ.முருகேசன் ஆகியோர் பேசினர்.
மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார், மாவட்டச் செயலர் செ.பால்ராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.பிரம்மநாயகம், சு.கோமதிசங்கர், மாவட்ட துணைத் தலைவர் த.மணிமேகலை, நகரச் செயலர் முருகேசன், அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் சு.வேல்ராஜன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள், சே.சுப்பிரமணியன், ரெ.ரவிச்சந்திரன்,சி.வெங்கடாச்சலம், ப.கணேசன், நகரப் பொருளாளர் முனீஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.வட்டாரச் செயலர் க.மாரிமுத்து வரவேற்றார். மு.முத்தானந்தம் தேவதாஸ் ஏற்புரை நிகழ்த்தினார். வட்டாரப் பொருளாளர் ப.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT