நீச்சல் வீரர்களின் திறன் கண்டறியும் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆ.ஜெயசித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் நீச்சல் வீரர்கள் -வீராங்கனைகளுக்கான திறன் கண்டறியும் பயிற்சி திட்டத்திற்கான போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், 12 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 31 பேர் கலந்துகொண்டனர். திறமைகளின் அடிப்படையில் 10 வயது முதல் 14 வயது வரையிலான 10 வீரர்கள், 10 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 6 மாதங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவர்களின் பேக்குவரத்து செலவு, சீருடைகள், உணவு ஆகியவை வழங்கப்படும். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.