அச்சன்புதூர் பேரூராட்சி மற்றும் இந்தியன் பள்ளி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் வாசுதேவன் தலைமை வகித்தார். பேரணியை அச்சன்புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார். இதில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பேரணியில், பள்ளி ஆசிரியைகள் செய்யதுஅலி பாத்திமா, மீனா, கோமதி, முத்துக்குட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.