திருநெல்வேலி

75 ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

29th Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில் நடைபெற்ற ஆய்வின்போது விதிகளை மீறி கூடுதல் இருப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கடை ஊழியர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 345 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் த.நா.பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மு.முத்துசாமி தலைமையில் இம் மாவட்டத்தில் உள்ள 75 ரேஷன் கடைகளில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 75 கிலோ அரிசி, 13 கிலோ கோதுமை, 114 கிலோ சீனி, 25 கிலோ துவரம் பருப்பு, 60 பாக்கெட் பாமாயில், 70 தேயிலை பாக்கெட்கள், 54 உப்பு பாக்கெட்கள், 4 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் இருப்புக் குறைவு ஏற்படுத்தியும், சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.16 ஆயிரத்து 345 அபராதம் விதிக்கப்பட்டு, தவறு செய்த பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் விநியோகத்தில் தவறு செய்யும் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT