திருநெல்வேலி

மேலமெஞ்ஞானபுரம் சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா

29th Jul 2019 07:15 AM

ADVERTISEMENT

பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலமெஞ்ஞானபுரம் திருத்தூதர் தூய சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா ஜூலை 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தொடர்ந்து  நவ நாள்களில் தினந்தோறும் மாலை ஜெபமாலை, திருப்பலி, சிறப்பு மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நற்கருணை பவனியும், சனிக்கிழமை இரவு திருத்தூதர் திருவுருவ பவனியும் நடைபெற்றன .  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.  ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞா.குழந்தைராஜ் மற்றும் அருள் சகோதரிகள்  செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT