திருநெல்வேலி

மின்சார விழிப்புணர்வு கருத்தரங்கம்

29th Jul 2019 07:10 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் நகரப் பிரிவு சார்பில் மின்சார விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அம்பாசமுத்திரம் உதவி செயற்பொறியிளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். அம்பாசமுத்திரம் வட்டார பள்ளி மாணவர்களிடையே மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முகவர்கள் கருத்தப்பாண்டியன், லட்சுமணன், ஆய்வாளர்கள் கிருஷ்ணன், மோகன், கம்பியாளர்கள் கணேசன், ஆறுமுகம், ராசேந்திரன், ஞானத்துரை, மாரியப்பன், காளைமுத்து, வருவாய்ப் பிரிவு சுப்பிரமணியன், மணிகண்டன், சிவக்குமார், அருணாசலம், பார்வதிகுமார், உதவிப் பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், மாணவர்-மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அம்பாசமுத்திரம் கிராமப்புறப் பொறியாளர் வெங்கடசுப்பிரமணி வரவேற்றார்.  நிகழ்ச்சிகளை உதவி மின்பொறியாளர் ஆக்னஸ் சாந்தி தொகுத்து வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT