திருநெல்வேலி

பேட்டையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

29th Jul 2019 10:19 AM

ADVERTISEMENT

பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். 
பேட்டையைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடையில் மாவு வாங்குவதற்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்குத் திரும்பாததால், தாய் அந்தக் கடைக்கு தேடிச் சென்றார். அப்போது, சிறுமியை கடையின் உரிமையாளர் அப்துல் ரகுமான் (31),  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி சந்திப்பு மகளிர் போலீஸார்", போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT