திருநெல்வேலி

திசையன்விளை பேரூராட்சியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி

29th Jul 2019 07:20 AM

ADVERTISEMENT

திசையன்விளை பேரூராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிப் பகுதியில், அரசு அறிவிப்பின் படியும், பேரூராட்சிகளின் இயக்குநர், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உதவி இயக்குநர் ஆகியோரின் உத்தரவின் படியும், 500க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது.
உரக்கிடங்கு வளாகம், உடன்குடி ரோடு, வேன் நிறுத்தம், இட்டமொழி ரோடு, மடத்தச்சம்பாடு, நந்தன்குளம், செங்குளம் மற்றும் நீராதாரம் உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை திசையன்விளை பேரூராட்சி நிர்வாக அதிகாரி பாபு, சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், குடிநீர் பணியாளர் எட்வின் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT