திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் கருத்தரங்கம்

29th Jul 2019 10:16 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்- ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு,  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் ஞா.பால்ராஜ் தலைமை வகித்தார்.ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் செ.மைதீன்பட்டாணி, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் தி.பேச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணி நல்லாசிரியர் செ.ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டப் பொருளாளர் வை.முத்துப்பாண்டி, தமிழ்நாடு முதுநிலை உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில துணைச் செயலர் ச.நாராயணன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் எல்.லூக்காஸ்,  பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சங்கரன்கோவில் கல்வி மாவட்டச் செயலர் வே.சங்கர்ராம், மு.தங்கராஜ், தமுஎகச மாவட்டச் செயலர் மு.சு.மதியழகன், மாவட்ட துணைச் செயலர் ந.செந்தில்வேல்,  மூட்டா கணேசன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து எழுத்தாளர் ம.மணிமாறன் கருத்துரையாற்றினார். தமுஎகச செயலர் மூர்த்தி வரவேற்றார். தலைவர் ப.தண்டபாணி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT