திருநெல்வேலி

கோயில் திருவிழாவில்  பெண்ணின் சங்கிலி மாயம்

29th Jul 2019 07:13 AM

ADVERTISEMENT

வாசுதேவநல்லூரில் கோயில் திருவிழாவில் பங்கேற்ற பெண் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி மாயமானது குறித்துப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாசுதேவநல்லூர், நாட்டாண்மை நாயுடு தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி முத்துலட்சுமி(60).  இவர், அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் விழாவில் கடந்த 21ஆம் தேதி பங்கேற்றாராம். 
அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி மாயமானதாம். இதுகுறித்து, வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT