திருநெல்வேலி

உலகத் தமிழ் கழக பொன்விழா: சங்கரன்கோவிலில் 6ஆவது பொது மாநாடு

29th Jul 2019 07:16 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவிலில் உலகத் தமிழ் கழகத்தின் பொன்விழா ஆண்டு 6 ஆம் பொது மாநாடு  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் உலகத் தமிழ் கழகக் கொடியை திருநெல்வேலி  மாவட்ட அமைப்பாளர் அ.செல்லத்துரை ஏற்றி வைத்தார். இதையடுத்து புகைப்பட கண்காட்சி மற்றும் இயற்கை வாழ்வியல் மரபு வழிக் கண்காட்சி திறந்துவைக்கப்பட்டது. 
பின்னர்  கருத்தரங்கம் உலகத் தமிழ் கழகத் தலைவர் கதிர்.முத்தையன் தலைமையில் நடைபெற்றது. மாலையில் தமிழ்மொழி விழிப்புணர்வுப் பேரணி,  பயணியர் விடுதி முன்பிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் இனியவன் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. 
இந்தக் கருத்தரங்கில் உலகத் தமிழ் கழகத் தலைவர் கதிர்.முத்தய்யன், கணக்காய்வாளர் தனியவன், கண்ணம்மாள், அரணமுறுவல், இணைத் தலைவர் தமிழ்வாணன், நெறியாளர் ஆ.நெடுஞ்சேரலாதன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இல.நிலவழகன், மேற்கு மண்டல பொறுப்பாளர் தமிழடியான், துணைச் செயலர் கீரைத்தமிழன், படிக்கராமு ஆகியோர் தலைமையில் மொத்தம் 9 அமர்வுகள் அடுத்தடுத்து நடைபெற்றன. இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
ஏற்பாடுகளை உலகத் தமிழ் கழகம் அமைப்பினர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT