திருநெல்வேலி

பூலாங்குளம் பள்ளியில் உலக மக்கள்தொகை தினம்

27th Jul 2019 09:58 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக மக்கள்தொகை தின கருத்தரங்கு- பேச்சுப் போட்டி நடைபெற்றது.
பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மக்கள் நல்வாழ்வு- குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை வகித்தார். தலைமை
ஆசிரியர் ஜூலியான் டெய்சி மேரி முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் நளினி,  மாவட்ட மருத்துவ குடும்ப நல ஊரகப்பணிகள் துணை இயக்குநர் வசந்தகுமாரி,
மருத்துவ அலுவலர் கீர்த்தனா, மக்கள் கல்வி- தகவல் அலுவலர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் அளிக்கப்பட்டன.
ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார சுகாதார புள்ளியியலாளர் சாந்தி வரவேற்றார்.
தமிழாசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT